பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர் தொடர்பில் தொழிநுட்ப குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய திருமணமான நபரொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அவருடைய உடற்பாகங்களை புகைப்படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தேவையற்றவிதத்தில் பெண்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதேபோல் பலருடைய தேசிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் என்பவற்றை பெற்றுக்கொண்டு சிம் அட்டை விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொண்ட சிம் அட்டைகள் 107 அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள அதேவேளை சந்தேகநபரை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.