வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு முயற்சிகளுக்கு சுமுகமான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளேன்.
விரைவில் அதற்குத் தீர்வை எட்டு வேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களுடனான ஆளுநரின் சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்புத் தரப்புக்களின் தேவைக்காக காணி சுவீகரிப்பு அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்றது.
பொதுமக்க ளும், மக்கள் பிரதிநிதிகளும் அதை எதிர்க் கின்றனர். இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள மக்களின் காணி உண்மையில் அவர்களுக்குத் தேவைதானா?
அல்லது அந்தக் காணியை விடுவித்து மாற்றுக்காணியை அவர்கள் பெற்றுக் கொள்ளமுடியுமா என்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருடன் ஆராயவுள்ளேன்.
பாதுகாப்புத் தரப்பினருக்கு தாம் தற்போது நிலைகொண்டுள்ள காணி தேவையென்றால் காணி உரிமையாளர்களை அழைத்துக் கலந்துரையாடவுள்ளேன்.
இந்த விவகாரத்தை எவ்வளவு சுமுகமாகத் தீர்க்க முடியுமோ அவ்வளவு சுமுகமாக விரைவில் தீர்ப்பேன் என்றார் ஆளுநர்.