
(கோப்பாய்)
தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாற்றத்திற்க்கான இளைஞர் பேரவையினரால் நேற்றைய தினம் குருதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.



உரும்பிராயில் உள்ள கிராமிய உழைப்பாளர் அங்க அலுவலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலை குருதி வங்கி அதிகாரிகள் குருதியை பெற்றுக் கொண்டனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாற்றத்திற்கான இளைஞர் பேரவை இளைஞர்கள் 28 பேர் குருதி கொடையளித்தமை குறிப்பிடதக்கது.