
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பபட்ட ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் படகு, GPS , தொலைத்தொடர்பு சாதனங்கள், இழுவை மடி என்பனவும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளது
இதேவேளை அவர்களது தனிப்பட்ட சொத்துக்களை மீனவர்களிடம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சட்டத்தரணிகளாக ஜோய் மகிழ் மகாதேவா ,லோ.குகதாஸ்
ஆகியோர் ஆகராகியிருந்தனர்.
இதே வேளை அவர்கள் மீது விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளாக அனுமதி பத்திரம் இல்லாமல் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை,
மீன்பிடிக்கு ஆயத்தமான நிலையில் கடற்றொழில் உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டமை, தடை செய்யப்பட்ட இழுவைமடி பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதில் இரண்டாவது மூன்றாவது ஆகிய குற்றச்சாட்டுக்கள் முதலாவது குற்றச்சாட்டுக்கு ஒப்பானது என்றும் இதனால் இரண்டாவதும் மூன்றாவதும் குற்றச்சாடுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு முதலாவது குற்றச்சாட்டுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பினை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி கிரிசாந்தன் பொன்னுத்துரை வழங்கினார்.
இதில் யாழ் மாவட்ட இந்திய துணை தூதரக அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்
வடமராட்சி