
யாழ்.காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.