
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும் மட்டுமே செயற்படுகின்றதே தவிர, உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என்று வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் இன்று காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார்.