
வவுனியா நகர சபையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபை அமர்வு, இன்று காலை 9.30 மணிக்கு, வவுனியா நகர சபையில், தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நகர சபை தலைவரினால் முன்வைக்கப்பட்டது.
இதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தனுஸ்காந் எதிர்த்து வாக்களித்த நிலையில், ஏனைய 18 உறுப்பினர்களின் ஆதரவுடன், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்தை நக ரசபை உறுப்பினர் எம்.லறீப் வழிமொழிய, உப தலைவர் குமாரசாமி வழிமொழித்தார்.
வரவு செலவுத்திட்டத்தில், 10 வட்டாரங்களுக்கு, தலா 3.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வட்டார பராமரிப்பு, வருமாண மேம்பாடு, தின்மக்கழிவு முகாமைத்துவதும், பொது விடயங்கள் உள்ளடங்களாக, 86.32 மில்லியன் ரூபா நிதிக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நகர சபை உறுப்பினர் திருமதி த.புஞ்சிகுமாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக, உறுப்பினர் தெரிவு செய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.