உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி, யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இடையில், இன்று நடைபெற்றது.
இன்று காலை 10:30. மணிக்கு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், போட்டி நடத்தப்பட்டது.
நீரிழிவு நோயாளர்களுக்கான போசாக்கான உணவு, பாதுகாப்பான உணவு, உள்ளுர் மற்றும் விலை குறைந்த உணவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், போட்டி இடம்பெற்றது.
இதற்கு நடுவர்களாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தொற்று நோயியல் வைத்திய அதிகாரி எஸ்.சிவகணேஸ், மாகாண சுகாதார சேவைகள் பணிமனை சமுதாய மருத்துவதுறை பட்டப்பின் பயிலுனர் திருமதி சுரனுதா, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி த.சிறிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேவேளை, உணவு தயாரிப்பு போட்டியில் பங்குபற்றியவர்களில் மூவர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ்கள் நாளை வழங்கப்படவுள்ளதாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.