மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற சுமார் 40,000 கிலோகிராம் கிழங்குகள் உள்ளடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு அருகிலுள்ள தனியார் களஞ்சியசாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, தம்புள்ளை மாநகர சபைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த கிழங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பிரித்தெடுத்து மீண்டும் சந்தைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தம்புள்ளை நகரசபையின் தலைவர் ஜாலிய ஓபாத்தவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே மனித நுகர்வுக்கு பொறுத்தமற்ற கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்கலனுக்குள் இருந்த அனைத்து கிழங்குகளுமே மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்றவை என்று தம்புள்ளை மாநகர சபைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.