
நுவரெலியா பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதிக்கு சென்ற வனபாதுகாப்பு தினைக்கள உத்தியோகத்தர்கள் 15பேர் கொண்ட
இரண்டு குழுவினர், மாவெளி வனப்பகுதியில் திசைமாறிச் சென்ற நிலையில், இன்று பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகளை அழித்து சட்டவிரோத மாணிக்ககல் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய, நேற்று மாலை இரண்டு குழுக்களாக, வனபாதுகாப்பு தினைக்கள உத்தியோகத்தர்கள்
15பேர வனப்பகுதிக்குள் சென்றனர்.
இரண்டு குழுவினரும் வனபகுதிக்கு உள்நுழைந்த வேளையில் பனிமூட்டம் மற்றும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியாத நிலைமைகளால், திசை மாறிச் செல்ல நேரிட்டுள்ளது.
நேற்று இரவு வரை, தற்காலிக கூடாரங்களை அமைத்துத் தங்கியிருந்த இக் குழுவினர், இன்று பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.