60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களே, மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுன தெரிவித்துள்ளார்.
இதுவரை பத்து இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 480 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகளை ஒருசில நாடுகளே ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கக் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
முதல் மற்றும் இரண்டாவது டோஸாக வழங்கப்பட்ட தடுப்பூசியின் வகைகள் எதுவாக இருந்தாலும், தனிநபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி
பூஸ்டராக வழங்கப்படும்.