கொட்டும் மழையில் பனை ஓலை குடிசைகளில் வாழ்க்கை, ஒழுக்கு வீடுகளுக்கு போடுவதற்கு கூட ஒரு தர்ப்பாள் இல்லாத. நிலை,
கல்வீடு கட்டித்தருவதாக கூறி இருந்த பனை ஒலை குடிசையையும் உடைத்த அரசியல் வாதி, பட்டுவேட்டிக்காக கோவணத்தையும் இழந்த கதை.
யாழ் மாவட்டம பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்டதுடதான் அல்வாய் வடக்கு மகாத்மா வீதி,
இங்கு குடும்பங்கள் வசித்து வருகன்றன. இவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான தற்காலிக வீடுகள் கூட இல்லை, பெய்து கொண்டிருக்கும் இக் கனமழையில் சமைத்து உண்பதற்கு கூட ஒரு ஒழுங்கான பாதுகாப்பான இடம் இல்லை,
நாளாந்தம் கூலி வேலையை நம்பியே தமது வாழ்வாதாரத்தை நடாத்தும் அந்த மக்களில் பலர் ஒருநேர சாப்பட்டிற்க்கு கூட வசதியின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்,
உண்மையில் இந்த கிராமத்தில் வசிக்கின்ற குடிசை வீட்டு மக்களுக்கு ஏன் அரசாங்கம் வீடுகளை வழங்கவில்லை, அந்த மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகின்றார்களா என்ற கேள்வி எழுகிறது, ஓரளவேனும் பாதுகாப்பான பனை ஓலை குடிசைகளில் வசித்து வந்த மக்களுக்கு 41. பேருக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகள் கட்டித்தருவாதாக இருந்த ஓலை குடிசைகளும் உடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் வரை நிதி வழங்கப்பட்டு மிகுதி பணம் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் நான்கு ஆண்டுகளை கடந்தும் மிகுதி பணம் வழங்கப்படவில்லை.
அது தொடர்பில் அப்போது இப்போது அரசில் இருக்கும் அதேவேளை குறித்த வீட்டுத்திட்டத்திற்க்கு அடிக்கல்கள் நாட்டியவர்களுமான பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதிகளை கேட்டபோது அது கட ்த அரசுக்காலத்தில் இடம் பெற்றதாகவும் இந்த அரசு காலத்தில் அதனை வழங்க முடியாது என்றும் மறுக்கிறார்கள். அப்போதும் நீங்கள் தானே அதிகாரத்தில் இருந்தீர்கள்.அப்படியாயின் ஏன் இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது என்று கேட்டதற்கு அவர்களிடம் சரியான பதிலும் இல்லை, பல தசாப்தங்களாக வசிக்கின்ற ஒருசில மக்களுக்கு அந்த காணிகளுக்கான உறுதிகள் இல்லை, அதன் காரணமாகவும் ஒரு சிலருக்கு வீடுகள் வழங்கப்படவில்லை, அப்படி உறுதி இல்லாத காணி உள்ளவர்களுக்கு அவற்றை அரசிடம்/ அல்லது சுவீகரித்து அவர்களுக்கு அனிமதி பத்திரங்கள் வழங்கும் அதிகாரம் பிரதேச செயலருக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. அப்படி வழி இருந்தும் ஏன் பிரதேச செயலர் அவ்வளியை பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது.
யாழ் மாவட்டத்தில் இப்படியான மிகவும் பின்தங்கிய வாழ்க்கை வாழுகின்ற ஒரு கிராமம் வேறெங்கும்
உண்டா??????
அவர்களுக்கு இப்போது தேவை ஒரு பாதுகாப்பான வசிப்பிடம், தற்போதைய மழை சூழலில் அவர்களுக்கு மழை ஒழுக்கு இன்றி வசிக்க ஒரு தரப்பாளும், உலர் உணவுமே……!