உணவு பொதி உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அனைத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உணவு பொதி ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா அதிகரிக்கப்பட்டு 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் எதிர்காலத்தில் அதனை மேலும் அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி இல்லாவிட்டால் மரவள்ளிக்கிழங்கு, பூசணி போன்றவற்றை வைத்து மாத்திரமே உணவு பொதி பார்சல் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது போஞ்சி, கரட் உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றின் விலைகள் 500 ரூபாய்க்கு அதிகமாக உள்ளன. வரலாற்றில் இதுவே முதல் தடவையாக மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.