
நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.
அவர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28 துணை அலகிற்கு மேலதிகமாக , ‘பீ.1.617.2.104’ என்ற புதிய துணை அலகொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் உள்ள டெல்டா மாறுபாடுகள் இப்போது இலங்கையில் தோன்றிய இரண்டு தனித்துவமான துணைப் பரம்பரைகளைக் கொண்டுள்ளன.
இவை ‘ ஏ.வை.28 – ஏ.வை.104 என்று அடையாளப்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் இப்போது மூன்று கொவிட் திரிபு வகைகள் காணப்படுகின்றன. அவை இலங்கையிலட தோன்றியவையாகும்.
அந்த வகையில் முதலாவதாக தோன்றிய பீ.411 திரிபு 2020 டிசம்பரிலும் , பீ.1.1.7 கடந்த ஏப்ரலிலும் , பீ.1.617.2 கடந்த ஒக்டோபர் இறுதியிலும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் அந்த பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.