
எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்கவேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“சீனாவில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து உருவாகும் உலக உணவுப் பற்றாக்குறைக்கு நாடு தயாராகவேண்டும் என்று சீன அரசு கடந்த வாரம் அறிவித்தது.
சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையும் ஆபத்தில் இருக்கின்றது.
எனவே, இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, உணவு வழங்கல் மற்றும் அதிக பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.