ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை கையளித்தால் நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் தமது கட்சிக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பல்லேகம ஸ்ரீ நந்தனாரம விகாரையில் இன்று (20) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. வாழ்வாதார சுமை, விவசாயிகளின் பிரச்சினை என்பன உருவாக்கப்பட்ட பிரச்சினைகள். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் அவை ஏற்படவில்லை.
இந்த வரவு-செலவுத் திட்டத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு, தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. ஏனைய நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவவிலிருந்து மீள்வதற்கான தேசிய திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
நாட்டை மீள கட்டியெழுப்புவதுத் தொடர்பில் இந்த பாதீட்டில் என்ன உள்ளது.