
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல்வேறு பீடங்களையும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முதற்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.