எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவிவரும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா விநியோக நிறுவனங்களால் வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு சுமார் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக பேக்கரி பொருட்களின் உற்பத்தி வெகுவாக பாதிப்படைந்துள்ளதுடன்,எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்களுக்கு தேவையான பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.