சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் விசேட தேவையுள்ள பிள்ளையினை வைத்துள்ள தாய் ஒருவருக்கு கோழி வளர்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்டு இன்று அந்த திட்டம் பயனாளியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸிலிருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.