
யாழ்.பருத்தித்துறை – இமையாணன் பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த ந.ஜெயராசா (வயது 48) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை பனை மரத்தில் ஏற்றி கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை(22) வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா
விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்று பரிசோதனையில் நுரையீரலில் வெடிப்பு ஏற்பட்டு
மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது