தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் நாள் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரால் தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்த்துனால் கோரிக்கை கடிதம் ஒன்று நகரசபைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்க்கு தவிசாளரினால் இம்மாத இறுதிவரை தீருவில் பொதுப்பூங்காவில் எந்த ஒரு நிகழ்வினையும் நடாத்த வேண்டாமென வல்வெட்டித்துறை பொலீஸாரால் அறிவுறுத்தப்பட்டமையால் அனுமதி வழங்க முடியாதென நகரசபை தலைவர் ச.செல்வேந்திரா கடிதம் மூலம் எம்ணகே சிவாஜிலிங்கத்திற்க்கு அறிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பொலீஸாரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் உட்பட்ட தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு எதிராக போடப்பட்ட கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரால் இவ்வாறு தடை விதித்தது எந்த வகையில் நியாயம் என்றும், குறித்த தவிசாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை சுதந்திர கட்சி அதரவிலும் தவிசாளராக தெரிவானவர் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தீவிர ரசிகன் என்றும் தெரிவிக்கப்படுவதுடன், அத்துடன் கடிதத்தில் குறிப்பிடும் போதே சிவாஜிலிங்கம் அவர்களால் 23 ம் திகதி போடப்பட்ட கடிதம் எனவும், அதற்கு பதிலளிக்கும் கடிதம் 22ம் திகதி என போடப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றாமல் பொலீஸாருக்கு சேவையாற்றுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.