அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை வடக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின் ஒழுங்கமைப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் தலைமையில் நேற்று இக்கூட்டம் இடம்பெற்றது.
அரச அலுவலகங்களின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தற்போதைய வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்ஆயத்த வேலைத் திட்டங்கள், கிராம மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்துதல், முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை விருத்தி செய்தல், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.