
மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம் எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையினால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
“விதையாகி எங்கள் விளைவாகி – நாளை நட்டவை மலர்ந்து நம் நிலம் மலரட்டும்” எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச சபையினால் மரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு 21 வட்டாங்களுக்கும் சமமாக வட்டார உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று குறித்த மரங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் தவபாலன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்