
இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்ணடலம் இன்று நிலப்பகுதியை நோக்கி நகரும் என எதிர்வுகூறப்பட்டது.
ஆனாலும் அது தொடர்ந்தும் கடற்பகுதியில் நீடிக்கின்றது. இதனால் காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வு வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படும்.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 03.12.2021ம் திகதி வரை மழை தொடரும்.
அத்தோடு எதிர்வரும் 03.12.2021 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும்.
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புள்ள
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும். செறிவான மழை கிடைக்கும்போது இடி மின்னல் நிகழ்வும் இணைந்தே இருக்கும்
இதனால் இடி, மின்னல் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் அறியத்தரப்படும்என கூறியிருக்கின்றார்.