
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையான அல்- ஜலால் வித்தியாலயத்தியாலய சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற அதிபரும், பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக தலைவருமான ஐ.எல்.எம்.மஜீத் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இணைந்த வடகிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத், ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.வஸீர், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள், பிளாங் கோர்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.