தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலா பயணிகள் எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தவிர்ந்த வேறு எவரேனும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சுகாதார தரப்பினரால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரொன் திரிபின் அபாயம் காரணமாக மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இன்று இரவு முதல் இலங்கை தர தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.