நேற்றுமலை 6.05 உடன் நிறைவடைந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சம்பூர் போலீசார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவருடைய வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர் சாமியறைக்குள் இருந்த. விளக்கை அணைக்குமாறு அச்சுறுத்தியமைமினால் முறுகல் நிலை தோன்றியதையடுத்து சம்பூர் போலீசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்ப இடத்துக்கு வருகை தந்த சம்பூர் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நீதி மன்ற தடைக்கும் மாவீரர் நாளுக்கும் சம்பந்தமற்ற விடயத்தில் அரச படைகள் அராஜகத்தில் ஈடுபடுவதாக வீட்டு உரிமையாளர் விசனம் வெளியிட்டமையினால் கூட்டம் கலைந்து சென்றது.