நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26.11.2021) காலை-08.30 மணி தொடக்கம் நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு அம்பனில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக 71.0 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேற்படி காலப் பகுதியில் ஆனையிறவில் 54.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 38.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 37.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கிளிநொச்சி நகரத்தில் 28.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 21.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், இரணைமடுவில் 20.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 20.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, தெல்லிப்பழை, திருநெல்வேலி, நயினாதீவு மற்றும் யாழ்ப்பாணம் கோட்டை, யாழ்ப்பாணம் ஸ்ரான்லி ஆகிய பகுதிகளில் குறித்த காலப் பகுதியினுள் 20 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.