யாழ்.குசுமந்துறை பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் மாலை மக்களுடைய வீடுகளுக்குள் நுழைந்த கடற்படையினர் காணி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த தகவலை அப்பகுதி மக்கள் கூறியுள்ளதுடன், கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மாதகல் குசுமந்துறை பகுதியில் நேற்றய தினம் ஒரு பரப்பு காணியை கடற்படை தேவைக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் திரும்பி செல்லாது மீண்டும் வருகின்றனர் என தொிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் கடற்படைமுகாம் முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த இளவாலை பொலிஸார் நில அளவீடு இடம்பெறாதெனவும்,கடற்படை அச்சுறுத்தினால் தமக்கு தொியப்படுத்துங்கள் எனவும் கூறிச் சென்றிருக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே மாலைவேளையில் பொதுமகனின் வீட்டுக்குள் நுழைந்த கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்