அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றுடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை கடந்த 29ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த நபரும், அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்று உறுதியான குறித்த நபர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டறியப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.