முல்லைத்தீவில் விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய குற்றச்சாட்டில் அகப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளருடன் சென்று காணி ஒன்றை அடாத்தாக அளக்க முயற்சித்ததுடன் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்துவதாக கூறி அச்சுறுத்திய விசேட அதிரடிப்படையினர் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அச்சுறுத்திய காணி உரிமையாளரான பெண் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு வழங்கியிருக்கின்றார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் 2 தடவைகள் விசேட அதிரடிப்படையினர் வீடு புகுந்து அச்சுறுத்தியமை மற்றும் தனது காணியை அடாத்தாக அளக்க முயற்சித்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சில காணொளி ஆவணங்களையும் காணி உரிமையாளரான பெண் பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதேவேளை சட்டரீதியாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டதுடன் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது