யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 52 எயிட்ஸ் நோயாளர்களில், 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தற்போது 35 பேர் எய்ட்ஸ் நோய்க்கான யாழ் மாவட்டத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.
பதினாறு பெண்களில் நான்கு பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது எயிட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் கர்ப்பவதிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கான எய்ட்ஸ் பரிசோதனை இடம்பெறுகிறது.
தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் தாக்கம் ஏற்படாவண்ணம் முற்கூட்டிய அறிவதற்காக குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.