
யாழ்.இளவாலை பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரு கோஷ்டிகளுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் வாள்கள், கம்பிகளுடன் இரு குழுக்களும் மோதியுள்ளது.
மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.