
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று பூநகரியில் இடம்பெற்றது.
காலை 9 மணியளவில் ஆரம்மான குறித்த மருத்துவ முகாம் வாடியடி புனித மரியன்னை ஆலயத்தில் இடம் பெற்றது.



வடமாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக மத வழிபாட்டுத்தலங்களில் கடமைபுரியும் மதகுருமார்கள், மற்றும் ஊழியர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நடமாடும் சேவையில் பொதுமக்களும் கலந்துகொண்டு சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.
குறித்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.