புவிக்கு நிரந்தரமாகத் தென்படாத சந்திரனின் பகுதியிலுள்ள ஒரேயொரு விண்கலமானது மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. சீன விண்கலமான யூட்டு – 2 என்ற விணகலமே இவ்வாறு மர்மப் பொருளைக் கண்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பொருளானது பெரும்பாலும் சந்திரக் கல்லாக இருக்கும் என்ற போதிலும் எதையும் மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் குறித்த பொருளை நோக்கி விண்கலம் நகர்ந்து வருகின்ற நிலையில் அப்பொருளிலிருந்து 260 அடி தூரத்தில் விண்கலம் உள்ள நிலையில் அப்பொருளை நெருங்க இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவை எனக் கூறப்படுகின்றது.