கல்முனை வடக்கு மற்றும் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை வடக்கு, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இஸ்லாமிக் றிலிப் நிறுவனத்தினால் 24 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பன தொடர்பாக இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
செயலமர்வின் வளவாளர்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.றொசாயிறோ, காரைதீவு பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன் பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.