சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயற் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது.
அந்தவகையில் சுவிஸ்லாந்தில் வசிக்கின்ற “interleo garage ” உரிமையாளரும் மனிதநேயம் மிக்கவரும் தொழிலதிபருமான திரு தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி உதவியுடன் அன்பேசிவம் அமைப்பின் முதலாவது வீட்டுதிட்ட தொகுதி வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் வீட்டுத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட காட்டுமுறிவு கிராமத்தில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து வந்த ஐந்து குடும்பங்களிற்கு கட்டி உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் வீட்டுதிட்டம் கையளிக்கும் நிகழ்வில் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் திரு குமரேசன்-குமணன், தலைவர் அருமைத்துரை-அருளானந்தசோதி, செயலாளர் திரு தில்லையம்பலம்- வரதன், நிர்வாக உறுப்பினர்கள் மாவட்ட இணைப்பாளர்கள் தொண்டர்கள் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிகள் என அனைவரும் கலந்து கொண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ் அன்புகரம் கொடுக்கும் திட்டத்தில் வீடுகளை பெற்று பயன் பெற்ற மக்கள் திரு ராஜமோகன்(கண்ணன்)எல்லா செல்வமும் பெற்று நீடுழிவாழ வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் திரு ராஜமோகன் குடும்பத்தினர் எல்லாம் வல்ல சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சிவபெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி நன்றிகளையும் தெரிவித்த்தனர்.
இதுவரை காலமும் எந்த உதவியுமின்றி சிறு ஓலைக்குடிசையில் வெயில்,மழை, காட்டு விசமிருகங்களின் தொல்லை என்பனவற்றால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு இவ் வீட்டுதிட்டம் அன்பேசிவ அமைப்பால் கிடைத்தது மிகப்பெரிய விடயம் என கிராமமக்கள் நன்றியுணர்வுடன் தெரிவித்தனர்.
காட்டுமுறிவு கிராம மக்களுக்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
அத்துடன் தாயகமக்களின் தேவைகளை அறிந்து தொடர்ச்சியாக உதவிகள் செய்து வரும் அன்பே சிவம் குழமத்திற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர் காட்டுமுறிவு கிராமமக்கள்.