தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.
காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 46ஆவது மாதாந்த அமர்வும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான அமர்வும் இன்று சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்தில் தவிசாளர் உரையைத்தொடர்ந்து 11 உறுப்பினர்களினதும் வரவு செலவுத்திட்ட கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதன் பின்பு 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தவிசாளர் கி.ஜெயசிறில் முன்மொழிய மு.காங்கிரசின் மூத்த உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் அதனை வழிமொழிந்தார்.
தொடர்ந்து இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 7வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான கி.ஜெயசிறில, ச.நேசராசா த.மோகனதாஸ், சி.ஜெயராணி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், எம்.எம்.றனீஸ், காரைதீவு சுயேச்சைக்குழு உறுப்பினர் சதாசிவம் சசிகுமார் ஆகியோர் வாக்களித்தனர்.
எதிராக ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி உறுப்பினர்களான
எ.எம்.ஜாகீர், கே.ஜெயதாசன், சுயேச்சைக்குழு உறுப்பினர்களான எ.ஆர்.எம்.பஸ்மீர், கே.குமாரசிறி அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.ஜலீல் ஆகியோர் வாக்களித்தனர்.