
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றைய தினம் சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் குறித்த குழியினுள் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.