இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 11:20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திமோர்-லெஸ்டேக்கு மேற்கே அமைந்துள்ள புளோரஸ் தீவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மௌமருக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளோரஸ் கடலில் நிலநடுக்கம் பதிவானது.
இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கங்களினால் பாதிக்கப்படும் பல தீவுகளை கொண்ட ஒரு நாடாகும். 9.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவின் மேற்கு கடற்கரையினை தாக்கியது.