
மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்றைய தினம், தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சபை அமர்வு தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது. எனினும் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம்பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.