
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்றிட்ட உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த யா-ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் – 07 மாணவிக்கும், குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம்-09 இல் கல்வி கற்கும் மாணவிக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில், சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் துரை.கணேசமூர்த்தி, சமதான நீதவான் க.தருமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.