“லியோனார்ட்” என்ற பெயரைக் கொண்ட வால் நட்சத்திரம் (C2021A1) எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் இலங்கையர்களுக்குத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, வால்மீன் வியாழன், சனி மற்றும் வெள்ளிக்கு தென்மேற்கில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றுக் கண்ணால் இதனை பார்ப்பது மிகவும் கடினம் என்றும் ஆனால் மிகவும் தெளிவான வானம் இருந்தால் இதனை காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வால் நட்சத்திரம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட 35,000 மடங்கு மிக அதிக வேகத்தில் பயணிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த வால் நட்சத்திரம்
இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்ட சிறந்த வால் நட்சத்திரம் இதுவென்று தெரிவித்துள்ள அவர் தற்போது பூமியை சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரம் ஜனவரி 3ம் திகதி சூரியனுக்கு மிக அருகில் நகரும் என்றும், ஜனவரி தொடக்கம் இதை அவதானிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.