எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம் என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் தெரிவித்தார்
பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு இன்றைய தினம் பல வரலாறுகளை நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன் யாழ் நூலகத்தின் உலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன் அவர்களின் உலகம் பற்றிய முழு படங்களையும் நம்முடன் எனக்குவிளங்கப் படுத்திருந்தி யிருந்தார்கள்
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் தொடர்பினை களை பேண விரும்புகின்றோம் என்றார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மீனா மணிவண்ணன் இன்றைய தினம் சீன நாட்டின் தூதுவர் என்பது பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு தமது காணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் அத்தோடு நமக்கு இந்த நூலக அபிவிருத்தி தொடர்பில் பல விடயங்கள் கேட்டறிந்து கொண்டார் அதற்கு நாம் நூலகத்தின் நிலைமைகள் தொடர்பில்விளங்கப்படுத்தியதோடு இந்த நூலகத்தினை எலக்றோனிக் நூலகமாக மாற்ற நடவடிக்கை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம் அதற்கு நாங்கள் உங்களால் உதவ முடியுமா என வினவிய போது தாங்கள் அதற்கு உதவ முடியும் எனவும் கூறியிருந்தார் என்றார்
யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவரை யாழ் மாநகர முதல்வர் வரவேற்று மலர் மாலை அணிவித்து தோடு இன்னிய வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்ட தூதுவர் யாழ் பொது நூலக செயற்பாடுகளை பார்வையிட்டதோடு யாழ்ப்பாணத்தின் அடையாளமாக பொது நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யாழ் இசைக் கருவி தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் சீன தூதுவர் எடுத்துரைத்ததோடு யாழ் இசைக்கருவியை சீனத் தூதுவர் பார்வையிட்டதோடு யாழ் பொது நூலகத்தில் இயங்கும் இந்திய பிரிவினையும் பார்வையிட்டதோடு இந்திய பிரிவில் காணப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவச்சிலையை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.