
இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபை ஆகியவற்றின் நிறுவுனரும் பிரதம ஆணையாளருமான அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளி/ விசுவமடு பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 17.12.2021 பி.ப 2.30 மணிக்கு இலங்கை முதல் உதவிச் சங்கம் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபையின் மகளீர் அணி பொறுப்பாளர் திருமதி ச.கேதீஸ்வரி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.









இந் நிகழ்வில் இலங்கை முதல் உதவிச் சங்கம், இலங்கை இந்து சமயத்தொண்டர் சபைகளின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ் அவரது திருவுருவ பத்திறக்கு ஈகை சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து அமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு வை. ஜெகதாஸ், மகளீர் அணி பொறுப்பாளர் திருமதி ச. கேதீஸ்வரி ஆசிரியர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், அணித்தலைவர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள், மாணவர்கள், ஆகியோர் ஈகை சுடரேற்றி மலர் மாலை அணிவித்தும், மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அகவணக்கம், இடம்பெற்றதுடன்,
இலங்கை முதல் உதவிச் சங்கத்தின் நிதிப் பிரிவு பொறுப்பாளரும், காவல்துறை உப பொலிஸ் பரிசோதகரும், வடமாகாண மனிதவள பிரிவு பதில் பொறுப்பதிகாரியுமான
ஜேசுராசா ஜெயரோசனின் நிதி பங்களிப்பில்
மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.