
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று(18) இரவு விபத்து இடம் பற்றுள்ளது.
பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் தளம்பியதால் பளைநோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து கயஸரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென முன்னால் சென்ற கயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதால் வேக கட்டுப்பாடை இழந்து ஏ9வீதியருகே கவிழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.