முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர்.
இதன் போது எதிர்வரும் 22.12.2021 வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிசாருக்கு மன்று அனுமதி வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் சந்தேகநபரான மனைவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், அவரது இரகசிய காதலனான மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்ததுடன், நேன்றைய தினம் (18.12.2021) சான்று பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.