வீட்டுத்திட்டம் தொடர்பாக பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் நேற்று (19/12) விஜயம் மேற்கொண்டிருந்தார்
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மலையாளபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே யாழ் இந்தியத் துணைத் தூதுவர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
2017ம் ஆண்டு இறுதிப்பகுதியில் 24 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.
வீட்டுத்தட்டம் வழங்கப்பட்ட போதும் ஆரம்ப தொகை மாத்திரமே வழங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக அடுத்த கட்ட தொகை வைப்பிலிடப்படாத நிலை காணப்படுள்ளதால்
குறித்த பகுதிக்கு இந்திய துணைத்தூதுவர் சென்று ஒவ்வொரு வீடுகளையும் சென்று பார்வையிட்டு மக்களோடும் கலந்துரையாடியிருந்தார்.