யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தவறியவேளை ஒரு இளைஞன் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது இருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில் சுமார் ஐந்து நிமிடம் வரை தொங்கிக்கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பரப்பை ஏற்படித்தியது.
குறித்த இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இந்நிலையில் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு இளைஞன் மட்டும் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் பல நிமிடங்கள் தொங்கிக் கொண்டுந்துள்ளார். இதன்போது உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞன் பட்டத்தின் கட்டப்பட்ட கயிற்றை நோக்கி பின் நகர்ந்து சுமார் இருபது அடி உயரம் வரை வந்து தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் வீழந்தபோது உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைவிட குறித்த குடும்பஸ்தரது மகள் தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு அந்த ஆபத்தை புரிந்து கொள்ளாது ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ந்துள்ளமையும் இங்கு குறிப்பிட தக்கது