சவப் பெட்டிக்குள் வைத்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சவப்பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
பாணந்துறையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
பல இடங்களுக்கு சவப்பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்குள் கசிப்பு போத்தல்களையும் கொண்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இவரது சவப்பெட்டி தயாரிப்பு நிலையத்தனை பொலிஸார் சோதனை இட்டுள்ளனர்.
இதன்போது 16,000 மில்லி கோடா, 5 கசிப்பு போத்தல்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு அடங்கிய 8 பரல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மற்றும் சவப்பெட்டி தயாரிக்கும் பகுதியின் மையத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் பீப்பாய்கள் மற்றும் பிற உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேக நபர் வடிகட்டப்பட்ட கசிப்பு போத்தல்களை சவப்பெட்டிகளை கொண்டு செல்வதாக கூறி அவற்றை பதுக்கி வைத்து பல்வேறு
பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.